எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாள் - அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

edappadi birthday at trichy

கேக்வெட்டி கொண்டாட்டம்

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 ஆவது பிறந்த நாளை அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த வகையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் திருச்சியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 

பொதுமக்களுக்கு அன்னதானம்

அதனை தொடர்ந்து ஏழை எளியவர்க்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதேபோல் உறையூர் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில். பகுதி கழகச் செயலாளர்கள் மாவட்ட கழகத் துணை செயலாளர்கள் வட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.