அதிமுக பொதுச்செயலாளராக இ.பி.எஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது: தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு

ops vs eps

அதிமுகவில் நிலவும் தலைமை சிக்கல்

அதிமுகவில் கடந்த ஒரு ஆண்டாக ஒற்றை தலைமை சிக்கல் தொடர்ந்து வரும் நிலையில். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவுக்கு முன்னதாகவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறை சம்பங்களும் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற  பொதுக்குழுவில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றம், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, ஓ.பி.எஸ் மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசரணையில் உள்ளது.

பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இபிஎஸ் மனு

இந்நிலையில் தன்னை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ் வழக்கு தொடர்ந்தார். இதில், அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து, 10 நாட்களுக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இபிஎஸ் - ஐ அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் மனு

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றம் விதித்திருந்த 10 நாள் கெடு, வரும்  வெள்ளிக்கிழமையுடன்  நிறைவடையும் நிலையில் ஓ.பி.எஸ் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.