பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் மனு

eps vs ops

பொதுச்செயலாளராக பதவியேற்கு இபிஎஸ்

அதிமுக கட்சியானது இபிஎஸ் ஓபிஎஸ் என இரு அணியாக பிரிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், ஓபிஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதயேற்பார் என தெரிவிக்கப்பட்டது. 

பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது

இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது எனவும் ,கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என ,தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.