16வது நாளாக விவசாயிகள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்

former protest

தொடர் போராட்டத்தில் விவசாயிகள் 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் விவசாயிகளின் கோரிக்கைகளை கடந்த 15 நாட்களாக அரை நிர்வாணத்துடன் பலவேறு வகையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 16ஆவது நாளிலும் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. 

அமித்ஷா பொய் பேசி வருகிறார்

இந்த போராட்டத்தின்போது, லாபகரமான விலை கொடுக்காததால் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளதாகவும், இதனால்  வங்கிகளும் கடன் கொடுத்தவர்களும் விளைந்த நெல் வருமானத்தை கேட்டு மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், விவசாயிகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் எங்களுக்கு எல்லா உதவிகளை செய்து வருவதாக ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் அமித்ஷா பொய் பேசியிருப்பதாகவும், இதனால் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.  இதனை வெளிப்படுத்தும் விதமாக விவசாயி ஒருவர் இறந்த நிலையில் அவருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.