முயலுக்கு வைத்த கன்னியில் சிக்கிய நாய்..!

Dog

தாராபுரம் அருகே முயலுக்கு வைத்த கன்னியில் மாட்டிய நாயை தீயணைப்புத் துறையினர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் முயலை வேட்டையாட கன்னி வைக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக சென்ற நாய் ஒன்று அந்த கன்னி சுருக்கு கம்பியில் மாட்டி வலி தாங்காமல் கூச்சலிட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற 2 இளைஞர்கள், அந்த நாயை மீட்டெடுக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் போராடினர். ஆனால் கன்னியில் சிக்கிய நாய் வலியின் மிகுதியால் அவர்கள் இருவர்களையும் கடிக்க முயன்றதால் அவர்கள் பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர். 

பின்னர் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர். அடிப்படையில் தீயணைப்புத் துறை  நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 5 வீரர்கள் விரைந்து அப்பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த முள்வேலியில் மாட்டியிருந்த நாயை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர். 

முயலுக்காக வைத்த சுருக்கு கம்பியில் நாய் மாட்டியதால், பரவாயில்லை இதேது ஏதேனும் குழந்தைகளோ ஆட்களோ கால் மாட்டி இருந்தால் என்ன செய்வது என்ன சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கன்னி முயலுக்காக வைத்ததா அல்லது அப்பகுதியில் உள்ள நாய் தொந்தரவுகள் கொடுப்பதால் அதனை பழி வாங்குவதற்காக வைத்ததா என்ற கோணத்தில் அலங்கியம் காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.