3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் - வலுவான நிலையில், ஆஸ்திரேலியா

ind vs aus

தொடக்கத்தில் தடுமாற்றம் கண்ட ஆஸ்திரேலியா

ஐசிசி நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் காவாஜாவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே தடுமாறிய கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மார்க்கஸ் லபுஷேன் - வார்னர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில், 60 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து லபுஷேன் 26 ரன்களின் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

சதமடித்து அசத்திய ட்ராவிஸ் ஹெட்

இந்நிலையில், களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்களின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட்ட இந்த இணையால் ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் வலுவான நிலைக்கு சென்றது. சிறப்பாக ஆடிய ட்ராவிஸ் சதமடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி 85 ஆவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது.

ட்ராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 156 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். 2 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், ஸ்மித் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தரப்பில், முகமது சிராஜ், ஷமி, ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.