எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை.. அதிமுக பொதுச்செயலாளர்களின் லிஸ்ட்.!

website post (47)

எம்ஜிஆர்

அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அக்டோபர் 17, 1972 அன்று மதுரையில் எம்ஜிஆரால் அதிமுக துவங்கப்பட்டது. அதிமுக-வின் முதல் பொதுச்செயலாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார்.

நாவலர் நெடுஞ்செழியன்

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர், 1978-ம் ஆண்டு அதிமுக-வின் பொதுச்செயலாளராக நாவலர் நெடுஞ்செழியன் பதவி வகித்தார். நெடுஞ்செழியன் தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர். 

ப.உ. சண்முகம்

அதன்பின்னர், ப.உ. சண்முகம் அதிமுகவின் பொதுச்செயலாளராக 1980 முதல் 1985 வரை பதவி வகித்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புக் கழக செயலாளராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இராகவானந்தம்

நாவலர் நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம் இவர்களுக்கு அடுத்து இவர்களின் சகாவான இராகவானந்தம் பொதுச்செயலாளர் பதவி வகித்தார். இவர் அந்த பதவியில் 1985 முதல் 1986 வரை இருந்தார். இவர் அதிமுக ஜானகி அணியின் துணை பொதுச்செயாலாளராகவும் பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஜெயலலிதா

எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் யார் தலைமை தாங்குவது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர்.எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆர் மனைவி வி. என். ஜானகி, தலைவராகவும்,முதல்வராகவும் ஆனார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய பிரமுகர் ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அஇஅதிமுக-வில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். பின்னர் ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் சட்டசபையில் ஏற்பட்ட சலசலப்பில் ஜானகி தலைமையிலான அரசு மத்திய அரசால் கலைக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆனார். அதற்குப்பிறகு 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து 28 ஆண்டுகள் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்து வந்தார்.

சசிகலா

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியோடு 2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த அதிமுக சரியான தலைமை இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது. இதனைக் காரணம்காட்டி அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. இதனால் 
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பு கொண்டு வரப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யட்டார். இதற்கு எதிராக சட்டப்போராட்டத்தை ஓபிஎஸ் தரப்பு முன்னெடுத்தது. இதில் ஓபிஎஸ்க்கு பின்னடைவு கிடைத்த நிலையில், அதிமுக-வின் 7-வது பொதுச்செயலாளராக இன்று எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.