கவுதம் காம்பீர் இப்படியெல்லாம் செய்யலாமா? கொதிக்கும் பெங்களூரு ரசிகர்கள்!

Gautam Gambhir

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு இடையேயான போட்டியில் கோஷம்போட்ட பெங்களூரு ரசிகர்களை பார்த்து கவுதம் காம்பீர் செய்த செய்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.  

பெங்களூரு - லக்னோ போட்டி:

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை சந்தித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  2 விக்கெட்டு இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. 

கவுதம் காம்பீர் செய்த செய்கை

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு இடையேயான போட்டியில் கோஷம்போட்ட பெங்களூரு ரசிகர்களை பார்த்து கவுதம் காம்பீர் செய்த செய்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.  

https://twitter.com/tanayvasu/status/1645505222188343300?s=20

நேற்று நடைபெற்ற போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது என்பதால் பெங்களூர் ரசிகர்கள் ஆர்.சி.பி… ஆர்.சி.பி என ஆக்ரோஷத்துடன்  கூச்சலிட்டனர். இதனை பார்த்த லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீர்  அமைதியாக இருக்கவேண்டும் என்று கை சைகையில் பெங்களூரு ரசிகர்களை பார்த்து காட்டினார். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

வலுக்கும் எதிர்ப்புகள்

ஒரு மூத்த வீரராக இருந்துக் கொண்டு கவுதம் காம்பீர் இப்படி செய்து இருக்கக் கூடாது என்றும் ரசிகர்களை கொண்டாடக் கூடாது என்று செய்கை மூலம் சொல்வது தவறு என்றும் பலரும் கவுதம் காம்பீருக்கு எதிராக இணையத்தில் பெங்களூரு அணி ரசிகர்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.