நடிகைகளை தாக்கும் அரிய வகை நோய்கள்..!

Samantha poonam kaur

நடிகை சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதுபோல், மற்றொரு நடிகையும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

நடிகைகள் தங்கள் சருமம் மற்றும் உடல் அழகை கூட்டுவதற்கு என்று பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வது வழக்கம். அப்படி சிகிச்சை மேற்கொள்ளும் அவர்களுக்கு அரியவகை நோய்களும் தாக்குகின்றன. 

சமந்தா 

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஸ்டூடியோவிலும் குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் பேசிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்தி உள்ளனர். 

பூனம் கவுர்

இந்த நிலையில் நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெஞ்சிருக்கும் வரை 

பூனம் கவுர் தமிழில் 2007-ல் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் தமிழில் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

பைப்ரோமியால்ஜியா

பூனம் கவுரை தாக்கியுள்ள பைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை நோயால் சோர்வு, தூக்கம், மன நிலை பிரச்சினைகள் ஏற்படும். அதோடு வாழ்நாள் முழுவதும் இந்த நோயின் பாதிப்பு இருக்கும்.  தற்போது பூனம் கவுர் உடல் வலியால் அவதிப்படுவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகள்

சமந்தா மற்றும் பூனம் கவுரை தாண்டி இன்னும் சில நடிகைகள் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

சாய்பல்லவி: இவரின் முகத்தில் அதிக முகப்பருக்கள் இருந்தது என்பது அனைவரும் அறிந்தது. ஒரு நேர்காணலின்போது இதைப்பற்றி சாய்பல்லவி இடம் கேட்கும் போது, அது முகப்பரு இல்லை என்றும் அது ரோசாசியா எனும் நோய் என்றும் அவரே கூறினார். அதாவது ரோசாசியா என்றால் ரத்தநாளங்கள் விரிவடையும் நோய். 

ஃபாத்திமா சனா: தங்கல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபாத்திமா சனா. இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். 

மம்தா மோகன் தாஸ்: சிலப்பதிகாரம், குரு என் ஆளு, எதிரி படங்களில் மம்தா மோகன்தாஸ், பல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து குணமாகியுள்ளார்.  

இப்படி பிரபல நடிகைகள் பலரும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்தம் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.