அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிட்ட இந்து முன்னணி அமைப்பினர் 

police station protest

போலீஸ் நிலையம் முற்றுகை

போஸ்டர விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு ஒன்றை அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வெள்ளியங்காடு அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடை முன்பு போஸ்டர் கிழித்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 

போஸ்டரால் வந்த மோதல்

தங்கபாலு என்பவர் அப்பகுதியில் கடை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஆறுமுகம் என்பவர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். வாடகை பாக்கி காரணத்தால் கடந்த நான்கு மாதங்களாக கடை பூட்டி கிடந்துள்ளது. பூட்டிக் கிடந்த கடையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதனை ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து கிழித்துள்ளனர். அப்போது அவ்வழியாக கடை உரிமையாளர் தங்கபாலு வந்துள்ளார். போஸ்டர் ஏன் கிழிக்கிறாய் எனக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

ஜாதி மோதல் நோக்கமா..?

இந்த நிலையில் தென்னாட்டு மக்கள் கட்சியை சேர்ந்த வாண்டையார் செந்தில் என்பவர் பிரச்சனையை திசை திருப்பி இந்து முன்னணியினர், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தாக்கினார்கள் என்று இணையதளம் மற்றும் முகநூலில் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பிலும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வாண்டையர் செந்தில் என்பவர் ஜாதி மோதலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஈடுபட்டு வருகிறார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. 

;பரபரப்பான காவல் நிலையம்

அமைதியாக உள்ள திருப்பூரை ஜாதி கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஈடுபட்டு வருகிறார். அவருடைய முகநூல் பக்கத்தில் இதனுடைய பின் விளைவு ரொம்பவும் கடினமாக இருக்கும் என்று மிரட்டும் தோணியில் பதிவு செய்துள்ளார். இவர் மீது கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்து முன்னணி பற்றி அவதூறு செய்திகளை பரப்பினார் என்று காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.