சசிகலா போஸ்டரை கிழிப்பு - தட்டி கேட்ட செயலாளரை வெட்டிய இந்து முன்னணியினர். 

thirupur violence

சசிகலா போஸ்டர் கிழிப்பு

திருப்பூர் வெள்ளியங்காடு பட்டுக்கோட்டையார் நகர் பகுதியை சேர்ந்த தங்கபாலு.  இவர் சின்னம்மா பக்தர் பேரவை அமைப்புச் செயலாளராக உள்ளார்.இவருக்கு சொந்தமாக கடைகள் உள்ளது அதனை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா பிறந்த நாளை ஒட்டி இவரது கடை ஷட்டரில் சசிகலா பிறந்தநாள் வாழ்த்து குறித்த போஸ்டர் ஒட்டியுள்ளார். இதனை இந்து முன்னணியினர் கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து முன்னணியை சார்ந்தவர்களுக்கும் தங்கபாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அறிவாளால் வெட்டிய இந்து முன்னணி

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்து முன்னணியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கபாலுவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தகராறு செய்துள்ளனர்.  தங்கபாலுவின் மனைவி ஷர்மிளா அவர்களிடம் சமாதானம் பேச முயற்சித்துள்ளார் ஆனால் இந்து முன்னணியினர் அவரது பேச்சை காதில் வாங்காமல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த தங்கபாலுவை, அறிவாளால் வெட்டியுள்ளனர்.

வழக்குப் பதிவு 

அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த தங்கபாலுவை எச்சரித்துவிட்டு அக்கும்பல் அங்கிருந்து  தப்பி சென்றது. தாக்குதலில் பலத்த காயமடைந்த தங்க பாலு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருதரப்புக்கும் வாக்குவாதம்

இதுகுறித்து தங்கபாலுவின் மனைவி ஷர்மிளா கூறுகையில், எனது கணவர் சின்னம்மா பக்தர் பேரவையில் அமைப்புச் செயலாளராக உள்ளார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவின் பிறந்தநாளை ஒட்டி எங்களுக்கு சொந்தமான கடையில் சின்னம்மாவின் பிறந்தநாள் போஸ்டரை எனது கணவர் ஒட்டியுள்ளார் ஆனால் அங்கிருந்த இந்து முன்னணியினர் அதனை கிழித்துள்ளனர். இதுகுறித்து எனது கணவர் கேட்டதற்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அது அப்போதே முடிந்தது என நினைத்திருந்தோம். 

வீடு புந்து வெட்டிய இந்து முன்னணியினர்

ஆனால் இந்து முன்னணியை சேர்ந்த வேலுச்சாமி 20க்கும் மேற்பட்ட ஆட்களை திரட்டி கொண்டு மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் எங்களது வீட்டிற்குள் அத்துமீறி வந்து எனது கணவரை அறிவாளால் வெட்டி உள்ளனர். இதில் எனது கணவரின் மூன்று விரல்கள் துண்டாகியுள்ளது அதுமட்டுமின்றி தலை கழுத்து பகுதி முதுகு தண்டுவடம் என நிறைய இடங்களில் அறிவாளால் வெட்டி உள்ளனர். இதுவரை 77 தையல்கள் போடப்பட்டுள்ளது. எனது கணவரை தாக்கியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.