உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை.! 2024-க்கான சமிக்ஞையா?

amitshah

வேலூர் மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில், இந்தியா முழுவதும் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் பொட்துக்கூட்டத்தை நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. அதனடிப்படையில், வரும் 8-ம் தேதி வேலூர் மாவட்டம் கந்தநேரியில் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 

இதையடுத்து, சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர இருக்கிறார். பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அமித்ஷா பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளார். அவர், விமானம் மூலம் சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.    

அதிர்வலைகளை ஏற்படுத்துமா?

முன்னதாக, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேலூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் சொல்லப்பட்ட நிலையில், தற்போது வேலூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டிருப்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேசிய தலைவர்கள், அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டுச் செல்வார்கள். 

2024-க்கான சமிக்ஞையா?

உதாரணமாக, கடந்த முறை தமிழகத்திற்கு வருகை தந்திருந்த தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா திமுக-வை விமர்சனம் செய்து பேசி சென்றது தமிழகத்தில் பேசு பொருளானது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக முதலமைச்சரை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் சந்தித்து சென்றது பேசு பொருளானது. இந்தநிலையில், வரும் 8-ம் தேதி உள்துறை அமைச்சர் தமிழகம் வரவுள்ளநிலையில், தமிழகத்தில் எந்தவிதமான குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.