கனகசபையில் பக்தர்களை அனுமதித்தால் தீட்சிதர்கள் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும் - உயர்நீதிமன்றம் கேள்வி

chidambaram temple kanagasabai

சர்ச்சைக்குள்ளான கனகசபை விவகாரம்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்களை அனுமதிக்கும் படி தமிழக அரசின் ஆணையை பிறப்பித்திருந்தது. இதற்கு அக்கோயில் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவில் கனகசபையில் பக்தர்களை அனுமதித்ததை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார். 

தமிழக அரசின் ஆணைக்கு எதிர்ப்பு

அந்த மனுவில், ஆயிரக்கணக்கானோர் வரும் கோயிலில் சிலரை மட்டும் கனகசபையில் அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் என்றும் பூஜை நடைமுறைகள் 
தமிழக அரசின் ஆணை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளது என்றும் கூறியிருந்தார். மேலும்,  கோயில் நிர்வாகத்தில் தலையிட மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும் ?

இதனை விசாரித்த நீதிமன்றம் கனகசபையிலிருந்து பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி  எழுப்பியுள்ளனர். அத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தால் தங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாக தீட்சிதர்கள் நினைத்தால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.