இந்தியா ஒரு சனாதன நாடு.. இது ஒரு நகைச்சுவை.. ஆளுநர் பேச்சு.!

sanathana

இந்தியா ஒரு சனாதன நாடு என்றும் சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் பொன்விழா ஆண்டு மற்றும் கட்டட திறப்பு விழா இன்று ஜூலை 1-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் உரை நிகழ்த்த துவங்கினார். அப்போது பேசிய அவர், 

பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை

"தமிழ்நாடு ஒரு புனிதமான இடம். இங்கு பல ஆன்மீக சிந்தனையாளர்கள் உருவாகி இருக்கின்றனர். தமிழ்நாடு சனாதனம் துவங்க முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவுக்கு அறிமுகம் தேவைப்படுகிறது, பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை என்று பேசினார். 

இந்தியா ஒரு சனாதன நாடு

தொடர்ந்து, சனாதன தர்மம் தீண்டாமையையும், பாகுபாட்டையும் வலுயுறுத்துகிறது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், சனாதன தர்மம் மனிதர்களிடத்தில் தீண்டாமையை வலியுறுத்தியதில்லை. இந்த நாடு 1947-ல் சுதந்திரம் அடைந்ததாக நினைக்கிறார்கள், இது நகைச்சுவையான ஒன்று. இந்தியா ஒரு சனாதன நாடு. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதான தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது. இதனை ஏற்கவில்லை என கூறும் நபர்களும் இதில் பயணம் செய்வார்கள்" என்று பேசினார்.