கடைசி ஒருநாள் போட்டியில் 409 ரன்கள் குவித்த இந்தியா..! 

Virat and Inshan

வங்க தேசம் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 409 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா - வங்கதேச தொடர் 

இந்திய அணி வங்க தேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு  மூன்று ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஏற்கெனவே டி20 உலக கோப்பை தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி அதன் பிறகு நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் 1 போட்டியில் நியூஸிலாந்தும் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதாலும், நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். வங்க தேச தொடரிலாவது இந்தியா வெற்றிபெறும் என நம்பிய ரசிகர்களுக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஏமாற்றத்தையும் தோல்வியையுமே பதிலாக அளித்தது. வங்க தேசம் அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

மூன்றாவது ஒருநாள் போட்டி

இந்நிலையில் ஏற்கெனவே வங்கதேச அணி தொடரை கைப்பறியதால் இன்றையப் போட்டி சம்பிரதாய போட்டியாகவே பார்க்கப்பட்டது. இதனால் கடந்த 2 போட்டிகளுக்கு இருந்த ஆர்வத்தைவிட இந்தப்போட்டியில் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து காணப்பட்டது. ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது போட்டு நடைபெறும் மைதானத்தை பார்க்கும்போதே தெரிகிறது. கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கும் நிரம்பி வழிந்தது, ஆனால் இன்றைய போட்டி நடைபெறும் ஷாகுர் அகமது சௌத்ரி மைதானம் ரசிகர்களின் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்படுகிறது.  

ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு

கடந்த போட்டியில் பீல்டிங் செய்யும்போது கை விரலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் பாதி போட்டியிலேயே பெவிலியன் திரும்பினார் ரோஹித் ஷர்மா. பின்னர் பேட்டிங் செய்யும்போது 9வது வீரராக களமிறங்கு 28 பந்துகளுக்கு அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்காக போராடினார். காயத்தால் போராடியும் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. காயம் காரணமாக இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மாவுக்கு 

அணியில் மாற்றம் 

காயம் காரணமாக ரோஹித் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், பந்து வீச்சாளர் தீபக் சாகருக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷணுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் எடுத்த இஷான் கிஷண்

தொடக்க ஆட்டக்காரர்களாக் இஷான் கிஷான் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் இறங்கினர். வழக்கம்போல வந்த வேகத்தில் 8 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்து ஷிகார் தவான் பெவிலியன் திரும்ப, விராட் கோலி இஷானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடி வந்த நிலையில் இஷான் கிஷண் 50 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய இஷான் தனது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிவர மற்றொரு பக்கத்தில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதம் அடித்தார். இஷானும் 126 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். மொத்தம் 131 பந்துகளுக்கு, 10 சிக்ஸ் 24 பவுண்டரி அடித்த இஷான் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

சதம் அடித்த விராட் கோலி 

பொறுமையாக ஆடி வந்த ரன் மிஷின் விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் தனது 72வது சத்தை பதிவு செய்தார். விராட் கோலி 91 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்துஅ 113 ரன்களுக்கு ஷாகிப் அல் ஹசன் பந்தில் மெஹிதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் 44 சதம், 64 அரை சதங்களும் அடித்துள்ளார். மொத்தம் 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 27 சதங்களும், 7 இரட்டை சதங்களும், 28 அரை சதமும் அடித்துள்ளார். 115 டி20 போட்டிகளில் 1 சதமும் 37 அரை சதங்களும் அடித்துள்ளார். விராட் கோலி சர்வதேச போட்டிகளில் இதுவரை 72 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 

இஷான் கிஷண் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 பந்துகளுக்கு 3 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு கேப்டன் கே.எல்.ராகுல் 10 பந்துகளுக்கு 8 ரன்களும், எடுத்து ஆட்டமிழக்க அக்சர் பட்டேலும் வாஷிங்டன் சுந்தரும் ஓரளவுக்கு நிதானமாக ஆடினர். ஆனால் அக்ஸர்  பட்டேல் 20 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது இந்திய அணி. 

கோலி - இஷான் பார்ட்னர்ஷிப் 

15 ரன்களில் ஷிகார் தவான் ஆட்டமிழந்த நிலையில் இரண்டாவது விக்கெட் 305 ரன்களிலேயே விழுந்தது. கோலி மற்றும் இஷான் இணைந்து 290 ரன்கள் குவித்தனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக அடித்த ரன்கள் 210 மற்றும் 113, எனவே இவர்கள் இருவரும் குவித்த மொத்த ரன்கள் 323 ரன்கள் ஆகும். மீதமுள்ள 86 ரன்களில் 9 எக்ஸ்ட்ரா ரன்களை தவிர 77 ரன்கள் மட்டுமே உள்ளது. ஷிகார் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வாஷிங்டன் போன்ற பேட்ஸ்மன்கள் என இந்திய அணியின் பிற ஆட்டக்காரர்கள் இணைந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். 

கடந்த இரண்டு போட்டிகளிலும் இஷான் கிஷணுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்தப்போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால், இந்திய வீரர்களில் விராட் கோலியைத் தவிர வேறு யாரும் பொறுப்பாக விளையாடி இருப்பார்களா என்பது கேள்விக்குறியே.