ஆஸ்கர் விருது பெற்ற இந்திய திரைப்படங்கள்.. ஆஸ்கரை தவறவிட்ட..! 

website post (56)

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் பிரபல  டால்பி தியேட்டரில் 95-வது ஆஸ்கர் விழா இன்று இந்திய நேரப்படி  காலை 5:30 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில்  இந்தியாவிலிருந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கார் விழாவை தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த விருதுக்கான பரிசீலனைக்கு இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு" பாடல் பிரிவிலும், "ஆல் தட் பிரீத்ஸ்", "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆகியவை குறும்படங்கள் பிரிவிலும் அனுப்பப்பட்டுள்ளன.  இந்த படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்குமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆஸ்கரை தட்டிதூக்கிய "ஆர்ஆர்ஆர்"

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் வியப்பூட்டும் நடனத்தால் உலகளாவிய "நாட்டு நாட்டு" பாடல் பிரபலமாக மாறியது. இந்தப் பாடலை சந்திரபோஸ் எழுதி, எம்.எம். கீரவாணி இசையமைத்து, பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான 'கோல்டன் குளோப்ஸ்' விருதையும், சிறந்த பாடலுக்கான 'விமர்சகர்களின் சாய்ஸ்' விருதையும் நாட்டு நாட்டு பாடல் பெற்றிருந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நடனப் பாடலுக்கு சிறந்த அசல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே "நாட்டு நாட்டு" பாடல் "சிறந்த ஒரிஜினல் பாடல்" பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. பாடலை எழுதிய சந்திரபோஸும், இசையமைத்த கீரவாணிக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் முதல் முதலாக ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் வென்ற படம் என்ற சாதனையை இப்படம் பிடித்துள்ளது.

ஆஸ்கர் அடித்த "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்"

அடுத்ததாக, முதுமலை யானைகள் சரணாலயத்தில் யானைகளை பராமரித்து வந்த தம்பதிகள் குறித்த ஆவணப்படமான "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்" படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட படம் தான் "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" என்ற குறு ஆவணப்படம். நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.

இதனையடுத்து, சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கரை தவறவிட்ட "ஆல் தட் ப்ரீத்ஸ்"

95வது ஆஸ்கர் விழாவில் இந்தியாவில் இருந்து ராஜமெளலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இதனிடையே "ஆல் தட் ப்ரீத்ஸ்" ஆவணப்பட பிரிவிலும், "தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்" ஆவண குறும்படப் பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்டிருந்தன. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதில், இந்திய ஆவணப் படமான "ஆல் தட் ப்ரீத்ஸ்" ஆஸ்கர் விருதை தவறவிட்டது. இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.