IPL 2023 - இன்றைய ஆட்டத்தில் மோதிக்கொள்ளும் KKR Vs PBKS

website post (89)

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான  ஐபிஎல் போட்டி இன்று (ஏப்ரல்1) மொஹாலியில் மதியம் 3:30 மணிக்கு  நடைபெறவுள்ளது. இரு அணிகளும் கடந்த ஆண்டு தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் தங்கள் நிலையை முடித்ததால் இந்த ஆண்டு வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கவுள்ளது. ஆனால் இரு அணிகளிலும் காயம் காரணமாக ஒருசில வீரர்கள் பங்கேற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

பஞ்சாப் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற செய்தி வந்துள்ளது. அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கர்ரன் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் கர்ரன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலையான 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானம் தொடர்ச்சியாக அதிக ஸ்கோர் அடிக்கும் மைதானமாக இருந்துவருகிறது . இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசும் என்று கருதப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களான ஷிகர் தவான், ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், பால்தேஜ் சிங், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , சாம் கர்ரன், சிகநாதர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங் மற்றும் மோஹித் ராத்தே ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளனர்.

அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், என். ஜாப்ஹவ் சிங், என். அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ், மன்தீப் சிங், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளனர்.