Weather Report: தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

Chennai Rain

வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் விளைவாக வரும் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சந்திக்கும் காற்று

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக, இன்று (23-03-202) முதல் வரும் 27ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இன்று மழைபெய்ய வாய்ப்பு
 
இன்று (23.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

வெள்ளி முதல் செவ்வாய் வரை 

நாளை (24.03.2023 - 26.03.2023) முதல் வரும் திங்கள் கிழமை வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அதைப்போல வருகின்ற செவ்வாய் கிழமையும் (27-03-2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை   பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பநிலை

சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் செண்டி மீட்டரில் கணக்கிடும் அளவிற்கு மழை பெய்யவில்லை என்றும், கடலோர மாவட்டங்களுக்கோ அல்லது மீனவர்களுக்கோ மழை குறித்த எச்சரிக்கை விடப்படவில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.