IT RAID: A1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை.!

it raid

தமிழகம் முழுவதும் கெமிக்கல், மெட்டல், சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, 
சென்னையில் உள்ள POEL என்டர்பிரைசஸ், POCS என்டர்பிரைசஸ், A1 சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள A1 சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர பரிபூரணத்தின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனையானது இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தில் ஒரு வருடத்தில் எந்த அளவிற்கு வருமானம் ஈட்டி இருக்கிறார்கள், முறையாக கணக்குகள் காட்டப்பட்டிருக்கிறதா, வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   

ஒரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக சோதனை நடைபெற்று வரும்நிலையில், இன்னொரு பக்கம் கெமிக்கல், மெட்டல், சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்த சைக்கிள் நிறுவனம் சைக்கிள் தயாரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.