"பிராமணர்களே வெளியேறுங்கள்" - ஜேஎன்யூவில் வெடிக்கும் சர்ச்சை.. விசாரணைக்கு உத்தரவிட்ட துணைவேந்தர்.! 

JNU Brahmin Issue

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்களால் நிரம்பியுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 


ஜேஎன்யூ பல்கலைக்கழகம்

டெல்லியில் இயங்கி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜேஎன்யூ) அவ்வப்போது மாணவர்களின் புரட்சி போராட்டங்கள் வெடிக்கும். அதோடு பல சர்ச்சை சம்பவங்களுக் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் அரங்கேறுவதும் வழக்கம்.  


பிராமணர்களுக்கெதிரான வசனங்கள்

இந்நிலையில், ஜேஎன்யூ வளாகத்தில் பல சுவர்களில் பிராமணர்களுக்கு எதிராக சில ஸ்லோகன்கள் எனப்படும் வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனால் கல்லூரி வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்(School of International Studies)- II கட்டிடத்தின் சுவர்கள் பிராமண மற்றும் பனியா சமூகங்களுக்கு எதிரான வாசகங்களுடன் நாசப்படுத்தப்பட்டதாக மாணவர்கள் கூறினர். 

"பிராமணர்களே வளாகத்தை விட்டு வெளியேறுங்கள்", "பிராமண பாரத் சோடோ(Brahmin Bharat Chhodo) மற்றும் "Brahmino-Baniyas, we are coming for you! We will avenge" போன்ற வாசகங்கள் வளாக சுவரில் உள்ளன. 


ஆர்.எஸ்.எஸ் – ஏபிவிபி குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ்- அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இடதுசாரிகள் நாசவேலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. 
அதில், "கம்யூனிஸ்ட் குண்டர்களால் கல்வி இடங்களை பெருமளவில் நாசப்படுத்துவதை ஏபிவிபி கண்டிக்கிறது. ஜேஎன்யூவின் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்- II கட்டிடத்தில் உள்ள சுவர்களில் கம்யூனிஸ்டுகள் துஷ்பிரயோக வசனங்களை எழுதியுள்ளனர். அவர்கள் மிரட்டுவதற்காக சுதந்திர சிந்தனையுள்ள பேராசிரியர்களின் அறைகளை சிதைத்துள்ளனர்" என்று ஏபிவிபி தலைவர் ரோஹித் குமார். 


ஆசிரியர் மன்றம் கண்டனம் 

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஜேஎன்யூ ஆசிரியர் மன்றம், “ இந்த சம்பவத்திற்கு இடதுசாரிகள் அமைப்பு தான் காரணம். அவர்கள் குழுதான் ஒவ்வொருவரையும் மிரட்டுகிறது. அதற்கு பதிலாக அவர்கள் இடதுசாரி மாணவ பிரதிநிதிகளுக்கு மரியாதை, நாகரீகம் மற்றும் அனைவரும் சமம் என்ற மதிப்பை கற்றுக் கொடுக்க வலியுறுத்துகிறோம்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. 


துணைவேந்தர் அறிக்கை

ஜேஎன்யூ வளாகத்தில் நடக்கும் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு ஜேஎன்யூ துணைவேந்தர் சாந்திஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். 

"இதுகுறித்து பல்கலைக்கழக டீன், ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் மற்றும் க்ரீவன்ஸ் கமிட்டி விரைவில் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.  ஜேஎன்யூ வளாகத்தில் எந்த விதமான வன்முறைக்கும் சகிப்புத்தன்மை இல்லை என்று துணைவேந்தர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்" என்று  துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.