நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி… காரணம் என்ன?

kamal hassan

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகரும் மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அரசியலில் இறங்கியதில் இருந்தே திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் ‘விக்ரம்’ படத்தில் நடித்தார். இந்த படம் இவ்வாண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படமாக உருவெடுத்தது. இதனைத் தொடர்து தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் இவர். 

அரசியல், சினிமா என இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் கடந்த ஞாயிறன்று ஐதராபாத் நடந்த மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். 

Kamal Haasan visits 'master' K Viswanath at his home - Hindustan Times

இந்த நிலையில், மீண்டும் சென்னைக்கு திரும்பிய இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய இவருக்கு உடல்சோர்வு இருந்துள்ளது. இதனை அடுத்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

அதில், ”லேசான காய்ச்சல் காரணமாக போரூரில் நேற்று இரவு நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளார்” என்று மருத்துவமனை அறிக்கைய் வெளியிட்டது.