ரூ .15 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர்  உதவி ஆய்வாளர் கைது

sub inspector arrest

ஆவணங்கள ஏற்க மறுத்த உயவிஆய்வாளர்

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் (37)  என்பவர் திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கு ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்திற்கு தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கவில்லை என்று  அரசு தரப்புக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனையடுத்து மனோகரன், ஆய்வாளர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு  நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி ஆவணங்களை கொடுத்துள்ளார். இதை ஏற்க மறுத்த உதவி ஆய்வாளர் கார்த்திக் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், திருச்சியில்  செயல்பட்டு வரும் எல்லா நிறுவனங்களும் எங்கள கவனித்து வருவதாகவும், ஆனால் உங்கள் நிறுவனம் மட்டும் எங்களை கவனிப்பதில்லை என கூறியுள்ளார்.  அதைத்தொடர்ந்து  நான் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் ஆபராதம் விதிக்கலாம் என மிரட்டும் தெனியில் பேசியதுடன் ரூபாய் 15,000 லஞ்சமாக கேட்டுள்ளார். 

லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன்

இது குறித்து மனோகரன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி  மணிகண்டம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று மாலை அவரது   அலுவலகத்தில் மனோகரன் லஞ்சப் பணம் ரூபாய் 15ஆயிரத்தை  பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.