அய்யாகண்ணு தலைமையில், வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

farmers protest

வங்கி முன் திரண்ட விவசாயிகள்

வங்கியில் விவசாய கடன் வாங்கிய விவசாயிகளில் வங்கி கணக்கில் பணம் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள IOB மண்டல வங்கி முன்பு திரண்ட விவசாயிகள் வங்கிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் அய்யாகண்ணு பேட்டியளித்தார்.  அப்போது பேசிய, 

அரசின் அறிவிப்பையும் மீறி பணம் பிடிப்பதா? 

ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டு,  ரூ.10 ஆயிரம் விவசாயக்கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் பிடிப்பது நியாயமா...? மாண்புமிகு மோடி ஐயா விவசாயிகளுக்கு பென்ஷன் பணம் மாதம் ரூ.500 கொடுக்கும், உணமுற்றோர் உதவி தொகை, விதவை உதவி தொகை,100 நாள் ஊதியம், வயது முதிர்ந்தோர் உதவி தொகை போன்றைவைகளில் இருந்து வங்கிகள் விவசாய கடனுக்கு பணம் பிடிக்ககூடாது என்று மத்திய நிதித்துறை அரசு கூறியும், விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடிக்கும் வங்கி மேலாளர்-ரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அதுபோன்று தவறு செய்யும் வங்கியை பூட்டு போட்டு விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

கைது செய்யப்பட்ட விவசாயிகள்

பின்னர் IOB வங்கி மண்டல மேலாளரிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாததாலும், விவசாயிகள் தொடர்ந்து  விவசாயிகள் வங்கி முன்பு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து  பின்னர் திருச்சி மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி வெஸ்டரி பள்ளி வளாகத்தில் அடைக்கப்பட்டனர்..