மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம்.. சர்ச்சையை கிளப்பிய துரைசாமி.. பதிலளித்த துரை வைகோ.! 

durai

தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என்று அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவிற்கு கடிதம் எழுதியிருப்பது மதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாகவும், மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்றும், வைகோ இன்னமும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று திருப்பூர் துரைசாமி வைகோவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாய் கழகத்துடன் இணைக்க வேண்டும்

மேலும், வைகோவின் குழப்ப அரசியல் காரணமாக பெருவாரியான மதிமுக தலைவர்களும், தொண்டர்களும் திமுகவிற்கே சென்று விட்டனர். 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  

ஏன் பதில் தரவில்லை

துரை வைகோவை கட்சியில்  முன்னிலைப்படுத்துவதாகவும், வைகோவுக்கு ஏற்கனவே 5 முறை எழுதிய கடிதங்களுக்கு ஏன் பதில் தரவில்லை என்றும் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நிலைக்குழு, மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக தன்னை விமர்சித்து பேசியிருப்பதாகவும் துரைசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துரை வைகோ பதில்

அவைத் தலைவர் துரைசாமியின் கடிதத்திற்கு மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதிலளித்துள்ளார். கட்சியில் குழப்பத்தை விளைவிக்க சிலரது தூண்டுதலின்பேரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதாகவும், துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், ஜனநாயக உரிமைப்படி, அவை தலைவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவரது கருத்துக்கு கட்சி பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடில்லை, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவிற்கு தனிப்பட்ட கொள்கை உள்ளது என்றும், மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.