அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம்.. அதிர்ச்சியை கிளப்பிய மனித உரிமை ஆணையம்.!

human

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சற்று முன்பு சந்தித்தார். அவரை சந்தித்த பிறகு கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,

ஒருவருக்கு மனித உரிமை மீறல் நடைபெற்றால் அதை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து அறிக்கையாக நீதிமன்றத்தில் அளிப்பது வழக்கம். அந்தவகையில், "அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன். அமைச்ச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது.

தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததால் தலையில் காயம் ஏற்ப்பட்டதாக செந்தில் பாலாஜி என்னிடம் தெரிவித்தார். தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாக என்னிடம் தெரிவித்தார். இறுதியாக, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்" என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.