WPL 2023: பெங்களூரு அணி மீண்டும் தோல்வி..!

Smiriti Mandana and Harman

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 19 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் அபார வெற்றிபெற்றது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் நேற்று (மார்ச்-21) மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்  அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

பெங்களூரு பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையானா சோபி டிவைன் டக் அவுட்டாகி வெளியேறினார். எல்லிஸ் பெர்ரி நிதானமாக விளையாடி 38 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய வீராங்கனைகள் ஹெதர் நைட் (12 ரன்கள்), கனிகா அஹுஜா (12 ரன்கள்) ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் களமிறங்கிய ஸ்ரேயங்கா பாட்டீல், மேகன் ஸ்சுட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.  ரிச்சா கோஷ் இறுதியில் நம்பிக்கை அளிக்கும் வனமாக  29 ரன்களில் அடித்து அவரும்  ஆட்டமிழந்தார். இதன்முலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களில் சுருண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர்  3 விக்கெட்டுகளையும், பிரண்ட் மற்றும்  இஸ்ஸி வோங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மும்பை பேட்டிங்

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீராங்கனைகள் ஹெலி மெத்தீவ்ஸ் 17 பந்துகளில்  24 ரன்கள் அடித்தார் , யாஷ்திகா பாட்டியா 26 பந்துகளில்  30 ரன்கள் அடித்தார்  . கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 ரன்களில் அட்டமிழந்த  நிலையில் அமீலா கெர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் அடித்ததால் மும்பை இந்தியன்ஸ்  அணி 16 ஓவர்களில்  129 என்ற இலக்கை  அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ஆர்சிபி  அணி 7 போட்டிகளில் விளையாடி வெறும் 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. போட்டிக்குப் பின்னர் இது குறித்து பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடுவோம் என ரசிகர்களுக்கு  அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .