தற்குறித்தனத்தின் உச்சம்! எம்ஜிஆர்-ன் பாடலை சுட்டிக்காட்டி இபிஎஸ்ஸை கடுமையாக சாடிய முரசொலி.!

website post - 2023-04-04T153604

வரலறு தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக சாடியிருக்கிறது. முரசொலி பத்திரிக்கையின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது; 

துரோகசாமி

தற்குறித்தனத்தின் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும் பழனிசாமி, தத்துவம் எல்லாம் உதிர்க்கத் தொடங்கி இருக்கிறார். சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து போய் பதவியைப் பெற்று, சசிகலாவின் காலை வாரி விட்டு பதவியைத் தக்க வைத்துக்கொண்ட துரோகசாமி அவர். 

அவரும் இந்த பழனிசாமிதான்

அந்தக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியே இறுதியானது, உறுதியானது. அதனை மாற்றி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் போட்டுக் கொண்டவர் பழனிசாமி. ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று பொதுக்குழு கூடி தீர்மானம் போட்டதும் இந்த பழனிசாமிதான். ‘நானே பொதுச்செயலாளர்’ என்று தீர்மானம் போட்டுக் கொண்டவரும் இந்த பழனிசாமிதான்.

துரோகத்தின் சம்பளமாக கிடைத்த பதவி

ஒரு கட்சி நடக்க வேண்டுமானால் பொதுக்குழு கூட வேண்டும் என்ற ஒற்றை வாதத்தை வைத்து மீண்டும் பொதுச்செயலாளராக ஆகி இருக்கிறார் பழனிசாமி. தகுதியற்ற மனிதர் பொதுச்செயலாளராக இருந்தால் என்ன? ஒருங்கிணைப்பாளராக இருந்தால் என்ன? தோற்கும் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருந்தால் என்ன? ஒருங்கிணைப்பாளராக இருந்தால் என்ன? தனது துரோகத்தின் சம்பளமாக கிடைத்த பதவியை வைத்துக் கொண்டு வாய்மூடிக் கிடப்பதை விட்டுவிட்டு, திமுக-வை சீண்டிப் பார்த்துள்ளார் பழனிசாமி.  

தற்குறி

"பிறப்பின் அடிப்படையில் தலைமையை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையைத் தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளைக் காத்து நிற்கும் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்" என்று சொல்லி இருக்கிறார் அந்த தற்குறி. பிறப்பின் அடிப்படையில் டெண்டர் விட்டு மாட்டிக் கொண்டவர்தான் இந்த பழனிசாமி என்பதை நாடு அறியும்.

சிலர் ஆசைக்கும்..

இவர்தான் 'பிறப்பின் அடிப்படை' என்று தத்துவம் எல்லாம் பேசுகிறார். பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பேசுவதற்கான எந்த அருகதையும் அவருக்கு இல்லை. சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடித்து வளர்ந்த பழனிசாமி தனது அறிக்கையில் பேரறிஞர் அண்ணா பெயரைச் சொல்வது அண்ணாவுக்கே இழுக்கு. அண்ணாவின் கொள்கைக்குத் துரோகம் இழைப்பதே அதிமுக என்பதை மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.