சபரிமலையில் புதிய விமான நிலையம் - மோடி ட்விட்

sabarimala airport

நாட்டின் முக்கிய ஆன்மீக தலம் 

கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும், ஆன்மீகத் தளமாகவும் சபரிமலை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலையின் கட்டுப்பாடுகள் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. குறிப்பாக சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இருந்தாலும், சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆன்மீக பயணிகளும், சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து வருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகளின் போக்குவரத்து சேவைக்கு ஏதுவாக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனால் வெளிநாட்டு பயணிகளின் போக்குவரத்து சேவைக்கும் ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பரீசலனை செய்த மத்திய அமைச்சகம் விமான நிலையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் மோடி ட்விட் 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, சபரிமலையில் விமான நிலையம் அமைவது ஆன்மீக சுற்றுலாவுக்கு மிகப்பெரிய செய்தி சென்று கூறியுள்ளார். மேலும், கேரளா மாநிலம் சபரி மலைக்கு அருகில் 2 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில், புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை குறிப்பிட்டு பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.