தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

NIA raid

சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னை, மதுரை தேனி, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணியால் பரபரப்பு

இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த முகமது அசாப் என்ற பயணி வந்து இறங்கினார். சந்தேகத்திற்கிடமான அந்த நபரிடம் திருச்சி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு முகமை NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் தகவலின் அடிப்படையில் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலும் மாநகர போலீசார்  150 பேர்  திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் நடத்தபட்ட அதிரடி சோதனையில் 4 செல்போன், 1 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகர காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.