சு. வெங்கடேசன் எம்.பி ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் மற்றும் அண்ணாமலை

nirmala seetharaman

சாக்கடை நீரில் மனிதனை இறங்க வைத்த அவலம்

பாஜக மாநில செயலாளரான எஸ்.ஜி.சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், மதுரை பெண்ணாடகத்தில் மலம் கலந்து நீரில் மனிதனை இறங்கி சுத்த செய்ய வைத்ததாகவும் இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அந்த தூய்மைப் பணியாளர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அவரை அங்கே சுத்தம் செய்ய  வைத்தது அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரான விஸ்வநாதன் என்பவர் தான் என்று குறிப்பிட்டதுடன்  மதுரை நாடமன்ற உறுப்பினர் சுவெங்கடேசன் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எஸ்.ஜி.சூர்யா கூறியது போல், மதுரையில், அப்படி ஒரு சம்பவம் நிகழ்வில்லை என்றும், பொண்ணாடம் பேரூராட்சி என்பது மதுரையிலேயே இல்லை என்றும், அப்படி ஒரு கம்யூனிஸ்ட் கவுன்சிலர் அங்கே இல்லை என்றும் கூறி எஸ்ஜி.சூர்யாமீது வழக்கு தொடரப்பட்டு சூர்யா கைது செய்ப்பட்டார்,

சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் 

சூர்யாவின் கைதுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.   அதனை கண்டித்து சு.வெங்கடேசம் எம்.பியை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த செங்கடேசன் பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம். என பதிவிட்டிருந்தார். 

எதிர்ப்பு தெரிவித்த நிர்மலா சீதாராமன்

சு.வெங்கடேசன் கருத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பது பீதியை பரப்புவது என்றாகுமா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், மதிப்பிற்குறிய நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்களே, எஸ்.ஜி சூர்யா கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை  
தமிழக அரசு  விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’? ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை கருத்து

அதேபோல சு.வெங்கடேசன் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவ அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், 2018 முதல் 2022 வரை, தமிழகத்தில் மட்டும் 52 தூய்மைப் பணியாளர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே உச்சகட்ட உயிரிழப்பு தமிழகத்தில் தான். பெண்ணாடம் பேரூராட்சியில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர், ஒரு தூய்மைப் பணியாளரை மலம் கழிந்த கழிவு நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து, அவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடையக் காரணமாக இருந்துள்ளார். குற்றம் செய்த அந்த பேரூராட்சி உறுப்பினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், இதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் மாநிலச் செயலாளர் திரு 
எஸ்.ஜி.சூர்யா அவர்களைக் கைது செய்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு

பொதுவுடைமை என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட, தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த விதத் தகுதியும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட்டுகள் திமுகவின் கிளை அலுவலகமாகத்தான் செயல்படுகின்றனர். வியர்வை சிந்தி வேலை செய்யும் தொழிலாளர்களிடம், பெயரளவில் சமூக நீதி பேசிக் காலம் காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் காலாவதியான கம்யூனிஸ்ட்டுகள். பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு. என கடுமையாக சாடியுள்ளார்.