நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை - அஷோக் கெலாட், பினராயி விஜயன் அறிவிப்பு

ashok ghelot

மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இதில், அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய முதலீடுகள், மருத்தும், உட்கட்டமைப்பு, திறன்மேம்பாடு, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், முதலமைச்சர்கள் மட்டுமல்லாது மத்திய அமைச்சர்கள், யூனியர் பிரதேச ஆளுநர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்கள், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

அஷோக் கெலாட், பினராயி விஜயன் புறக்கணிப்பு

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில், நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அறிவித்துள்ளனர். உடல் நலன் காரணமாக இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை அஷோக் கெலாட் விளக்கமளித்துள்ள நிலையில், பினராயி விஜயன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

ஆர்வம் காட்டாத முதலமைச்சர்கள்

அதேபோல், இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால், மேற்கு வந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்க மாட்டார்களும் தகவல்கள் வெளியாகி உள்ளது.