ஓணம் பண்டிகை முன்னிட்டு கோவில்களில் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

onam festival

ஓணம் பண்டிகை கோலாகலம்

நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகரில் உள்ள ஐயப்பன் கோவில் மற்றும் குருவாயூரப்பன் கோவில்களில் ஓணம் பண்டிகை முன்னிட்டு கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள  ஐயப்பன் கோவிலில் நேற்று இரவு முதல் பெண்கள் ஒன்றிணைந்து அத்தப் "பூ கோலமிட்டனர்.  

கோயில்களில் களை கட்டிய ஓணம்

கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடும்பத்துடன் கேரளா பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடி,  மகிழ்ந்ததோடு அத்தப் பூ கோலம் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதே போன்று ஊத்துக்குளி சாலையில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு குருவாயூரப்பன் கோவிலில் இன்று உலகத்தில் உள்ள அனைவரும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும்  என்பதற்காக முத்தங்கி அலங்காரத்தில் குருவாயூரப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.