பாஜகவை வீழ்த்துவது மட்டுமே எண்ணம்  - மம்தா பானர்ஜி

mamta

மாநில கட்சிகளை இணைக்கும் முயற்சியில் நிதிஷ் மற்றும் தேஜஸ்வி

பாஜகவிற்கு எதிரான வலுவான எதிர்க் கட்சியை உருவாக்கும் முனைப்பில் பல்வேறு மாநில அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாடு உள்பட பீஹார், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், உள்ளிட்ட மாநில கட்சிகள் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடையே கொண்டுள்ளன. இதனால் இம்மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உள்ளிட்டோர் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பாஜகவை வீழ்த்தும் வகையில் கங்கிரஸ் தலைமையின் கீழ் கூட்டணி அமைப்பது குறித்து பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அண்மையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளையும் ஒருங்கிணைக்க உள்ளதாகவும், நிதிஷ்குமார், மற்றும் தேஜஸ்வி யாதவும் கூட்டாக தெரிவித்தனர். 

பாஜகவை வீழ்த்துவதே எண்ணம்

இந்நிலையில், மேற்குவங்கத்தில்  அண்மையில் நடந்த இடைத்தேர்தலின் போது பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட திரினாமுல் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு காங்கிரஸ் தான் காரணம் என குற்றம்சாட்டிய மம்தா இனி காங்கிரஸுடனும் கூட்டணி கிடையாது என ஆவேசமாக கூறினார். இந்நிலையில், மம்தவை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பாஜகை வீழ்த்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எந்த தயக்கமும் இல்லை என்றும், பாஜகவை  வீழ்த்துவது தான் அனைவர்ன் எண்ணமாகவும் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தை பீஹாரில் நடத்த வேண்டும் என்ற செய்தியாளர்களிடம் பேசினார்.