எதிர்க்கட்சிகள் கூட்டம்.. 'போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி'.. அமித்ஷா விமர்சனம்.!

amit

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டமானது ஒரு போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் கூட்டம்.. தலைவர்கள் பங்கேற்பு

அசுர பலம் பொருந்திய பாரதிய ஜனதா கட்சியை 2024-ல் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கிவிடுவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர்கள். அந்த வகையில்தான், இன்று ஜூன் 23 பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டமானது நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இடதுசாரிகள் சார்பில் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, மகராஷ்டிரா சிவசேனா பிரிவின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  

அதிருப்தியில் ஆம் ஆத்மி

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்கப்போவதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதாக வருகை தந்திருக்கின்றனர். டெல்லியில் இயற்றப்பட்ட அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்று ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்தநிலையில், ஒரு சில நிபந்தனைகளுடன் கூட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒரு வேளை காங்கிரஸ் அவசர சட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை ஆம் ஆத்மிக்கு தெரிவிக்காமல் இருந்தால் கூட்டத்தின் பாதியில் இருந்தே கிளம்புவதற்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

அமித்ஷா விமர்சனம்

இந்தநிலையில், பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தை விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிசியிருப்பதாவது; "பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறுவது போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி என்று எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். மேலும், வரும் மக்களவை தேர்தலில் மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளர் என்றும், பிரதமர் மோடியையும் தேசிய ஜனநாயக கூட்டணியையும் எதிர்ப்பதாக நினைக்கும் எதிர்க்கட்சிகள், வரும் 2024 மக்களவை தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பிடித்து பாஜக பெரிய வெற்றியை பெறும்" என்று திட்டவட்டமாக பேசியிருக்கிறார்.