திருப்பூர் மாநகராட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்..!

Tiruppur

திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளையும் தனித்தனியே பிரித்து பகுதி வாரியாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் காயிதே மில்லத் நகர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அதிக அளவில் பொதுமக்கள் வசித்து வரும் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் துர்நாற்றம் வீசும் மேலும் குழந்தைகள், பெண்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி  மாநகராட்சி நிர்வாகத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரியப்படுத்தும் வகையில் 45-வது வார்டு பகுதி முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.