சந்தை கழிவுகளை ஊராட்சி மன்ற வாசலில்  கொட்டி  எதிர்ப்பை தெரிவித்த பொதுமக்கள்.

panchayat office trichy

அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்றம்

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர்கோவில் அருகே வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு சேகரமாகும் காய் கறி கழிவுகளை அகற்றி வந்த ஊராட்சி மன்றம் கடந்த இரண்டு மாதங்களாக அகற்றாமல் உள்ளதாக கூறப்படுகிறது. 

நடவடிக்கை எடுக்காத நிர்வாகம் 

இதற்கு நிரந்தர தீர்வு காண சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றினைந்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலரிடம் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

எதிர்ப்பை காட்டிய பொதுமக்கள்

ஒவ்வொரு வாரமும் சந்தை கழிவுகளை அகற்றும் பிரச்சனை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்த பின்பு தான்  குப்பை அள்ளப்படுகிறது. பலமுறை புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுக்கும் ஊராட்சி நிர்வாகத்தால்  ஆவேசம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று மாலை சந்தை கழிவுகளை சேகரித்து ஊராட்சி மன்ற வாசலில்  கொட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

தலைவர் & செயலர் மீது நடவடிக்கை 

இது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த  வேண்டுமென்றும், கடமையை செய்ய தவறும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.