Karnataka Elections 2023: கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு..! 

Karnataka Election 2023

கர்நாடக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

கர்நாடகா தேர்தல் 

கர்நாடகாவில் இந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்  விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பாஜகவை பொறுத்தவரை பசவராஜ் பொம்மை முதலமைச்சர் வேட்பாளராகவும், காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவும் முதலமைச்சர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா என தேசிய தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர். அதே வேலையில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மல்லிகார்ஜூன கார்கே போன்ற தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

வாக்குப்பதிவு

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 37.25 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்திவருகின்றனர்.