திருச்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் – தொடங்கி வைத்த அமைச்சர்கள்

minister knnehru minister m.subramaiyan

      அறுவை சிகிச்சைகளை  டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் விதமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நவீன அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 32 படுக்கையுடன் அமைக்கப்பட்ட தீவிர அவசர சிகிச்சை பிரிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

      அதைத்தொடர்ந்து அம்மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் காற்றோட்டம் மிகுந்த சூழலில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சைப் பூங்காவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்நிலையில், நோயாளிகளின் சலவை வசதிக்காக சலவை இயந்திரம் வேண்டி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதனை ஏற்று ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரத்தின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்த அமைச்சர்கள் அதனை பார்வையிட்டனர்.

      இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின்குமார், கதிரவன், இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மேயர் அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.