நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம்  மனு 

formers petition

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.  கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் ஒன்றிணைந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். அந்த மனுவில் விவசாயிகளையும், விளைநிலங்களையும் பெரிதும் பாதிக்கும் வகையில் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தில் அரசுக்கு மனு செய்யும் தொழில்முனைவோா் 250 ஏக்கா் நிலம் வரை பெற்றுக் கொள்ளலாம். இதனால், ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்தும் நிலை உருவாகும்.

மனுவை பரிந்துரைக்கு அனுப்புவதாக உறுதி

நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விளைநிலங்களுக்கு பாசனத்துக்கு நீா் இல்லாமல் போகும். ஒட்டுமொத்த விவசாயிகளும் நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளதால் இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், மாவட்ட நிா்வாகத்தால் முடிக்கப்படும் நிலையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பதாகவும், அரசின் அனுமதியை பெற்று மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு பரிந்துரை அனுப்புவதாகவும் உறுதியளித்தாா்.