மணிப்பூர் கலவரம்.. ராகுல் காந்திக்கு தடை.! 

ban

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தி மக்களை சந்திப்பதற்கு ஆளும் பாஜக அரசு தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

காடுகளில் தஞ்சமடைந்த மக்கள்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும், பலர் வீடுகளை காலி செது காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராணுவம் குவிப்பு

அமைதி நடவடிக்கை மேற்கொள்ள ராணுவம் அங்கு குவிக்கப்படுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கள ஆய்வு செய்தார். அதன்பிறகே அங்கு படைகள் குவிக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் தீவிரமான ரோந்து பணியில் இறங்கி உள்ளது.

ராகுல் காந்திக்கு தடை

மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி இதுவரையிலும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார். இந்தநிலையில், மணிப்பூரில் நடைபெற்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றார் ராகுல் காந்தி. அப்போது, சூரசந்த்பூர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி சென்றபோது, மணிப்பூரின் பிஷ்ணுபூரில் ராகுல் காந்தி சென்ற வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.