விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

wer

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று ( பிப்-27 ) விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

ஒரு சில வாக்காளர்களுக்கு மை வைக்கவில்லை என்றும், மை சரியாக வைக்கவில்லை என்றும் எதிர்கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதனால், சில மணி நேரம் அந்த வாக்குச்சாவடியில் பதற்றம் நீடித்தது. பின்னர் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்த பிறகு பதற்றம் சரி செய்யப்பட்டது. இன்னும் ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், குடிதண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளை சரியாக பின்பற்றவில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பின்னர் அதுவும் சரி செய்யப்பட்டு சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நடந்து முடிந்த இந்த இடைத்தேர்தலில் 77,183 ஆண்களும், 83,407 பெண்களும் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவித்துள்ளது. 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளது. இன்று நடந்து முடிந்த வாக்குப்பதிவு மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. மாலை 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.