அமெரிக்க அதிபர்களும் - அந்தரங்க அழகிகளும்

us presidents

அமெரிக்க அதிபர்களின் ஒவ்வொரு செயல்களையும் பேச்சுகளையும் உலகமே உற்று நோக்கும். அப்படிப்பட்ட பதவிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களது தனிப்பட்ட விஷயங்களை அதிக கவனமுடன் கையாள்வார்கள். அப்படி இருந்தும் அதிபர்களின் செயல்பாடுகளை விடவும், அவரின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதிலேயே பலரின் கவனம் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட சில அமெரிக்க அதிபர்களின் அந்தரங்க விஷயங்கள் வெளி வந்து ஒரு பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. 

அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜான் எஃப் கென்னடி - மார்லின் மன்றோ, பில் கிளிண்டன் - மோனிகா, டொனால்ட் ட்ரம் - ஸ்டார்மி டேனியல்ஸ், ஆகியோருக்கு இடையேய இருந்த திருமணத்தை மீறிய உறவு தான். 


ஜான் எஃப் கென்னடி - மார்லின் மன்றோ 

தூய்மையான அரசியல்வாதி

அமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுபவர் தான் இந்த ஜான் எஃப் கென்னடி. அவரின் அரசியல் நடவடிக்கைகள் உலகளவில், கவனம் பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அமெரிக்க வரலாற்றில் ஜான்.எஃப். கென்னடிக்கு என்றே தனி இடமும் உண்டு. அவரைப் பற்றி இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் அரசியல் தலைவர்களில் அப்பழுக்கற்ற தூய்மையான அமெரிக்க அதிபர் என்ற பெயரையும் எடுத்தவர். அப்படிப்பட்ட ஒரு தலைவர் மேல் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் சிஐஏ ஏஜென்ட் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். ஜான் எஃப் கென்னடிக்கும் ஹாலிவுட்டின் கனவுக் கன்னியான மார்லின் மன்றோவுக்கு நெருங்கிய உறவு இருந்ததாக கூறியிருந்தார். மேலும், இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது அமெரிக்கா மட்டுமல்லாது உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இளசுகளை கிறங்கடித்த மார்லின் மன்றோ

அன்றைய ஹாலிவுட் சினிமாவையே தனது அழகால் சுண்டி இழுத்த மார்லின் மன்றோவை அறியாதவர்களே இருக்க முடியாது. இன்றைக்கும் கூட மார்லின் மன்றோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஹாலிவுட்டின் முகமாகவே மாறிப்போன மார்லின் மன்றோவை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், செல்வந்தர்களுக்கும் போட்டி போட்டனர். தான் மார்லின் மன்றோவின் நண்பர் என சொல்லிக்கொண்டு அமெரிக்காவின் பல பிரபலங்கள் பெருமை பேசினர். அப்படிப்பட்ட மார்லின் மன்றோவுக்கு பல திருமணங்கள் நடந்திருந்த போதும், எந்த திருமணத்திலும் மகிழ்ச்சி இல்லாமல் இருந்துள்ளார். இறுதியில் இவரது மரணமும் சர்ச்சையாகவே நிகழ்ந்துள்ளது என்பது தனிக்கதை. மார்லின் மன்றோவுக்கும் அதிபர் ஜான். எஃப் கென்னடிக்கும் இருந்த நெருங்கி உறவு இருந்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் இருவர் நெருங்கி பழகியது தான் நேரில் பார்த்ததாக முன்னாள் சிஐஏ ஏஜென்ட் ஒருவர் கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அமெரிக்க வரலாற்றில் பல முக்கிய முடிவுகளை எடுத்த ஜான் கென்னடியின் மறுப்பக்கம் குறித்த தகவல்களால் பலர் இது தொடர்பாக ஆராயத் தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவருக்குமான நெருங்கிய உறவு இருந்தது குறித்து இதுவரை ஆதாரப்பூர்வமாக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும், இருவருக்குமிடையே பழக்கம் இருந்ததற்கான செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.  இது தான் அமெரிக்க அதிபர்களின் திருமணத்தை மீறிய உறவுகளின் தொடக்கம் எனவும் கூறப்படுகிறது. 

பில் கிளிண்டன் - மோனிகா லாவன்ஸ்கி 

அமெரிக்காவின் பிரபலமான அதிபராக இருந்தவர் பில் கிளிண்டன். இவரை எந்த அளவுக்கு உலகம் அறிந்து வைத்ததோ அதை விட இவரின் அந்தரங்க விஷயம் வெளி வந்து இவரை மேலும் பிரபலமாக்கியது.  அமெரிக்க அதிபராக பொறுபேற்றிந்த பில் கிளிண்டன் தனது அலுவலகத்தில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளி வந்து கிளிண்டனின் அரசியல் வாழ்க்கையை ஆட்டம் காண வைத்தது. இந்த உறவால் பில் கிளிண்டனின் பதவி பறி போகும் சூழ்நிலையும் கூட உருவானது. அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் தனது உதவியாளராக இருந்த மோனிகா லெவின்ஸ்கி என்பவரை கிளிண்டன் காதலித்து வந்ததாகவும், இருவருக்குமிடையே உடல் ரீதியிலான உறவு இருந்ததாகவும், உடன் பணி புரிந்த லிண்டா டிரிப் என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டு யாருடைய வாழ்க்கையை பாதித்ததோ இல்லையோ பில் கிளிண்டனின் தனிப்பட்ட வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. இதனால் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டனுடன் தகராறு வெடித்தது. இதனால் அதிகம் பொது வெளியில் தோன்றுவதை ஹிலாரி கிளிண்டன் தவிர்ந்து வந்தார்.

1998 ஆம் ஆண்டு அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது செனட் சபையில் தீர்மானம் நிறைவேறாததால் அதிபர் பதவியில் தொடர்ந்தார் பில் கிளிண்டன். அப்போது தான் பில் கிளிண்டனுக்கும் மோனிகாவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களை ட்ரிப் பதிவு செய்ய தொடங்கினார். இந்த உடையாடல்கள் தான் கிளிண்டனுக்கும் மோனிக்காவுக்கும் இடையே உறவு இருந்ததை சற்றே வெளிகாட்டும் விதமாக இருந்தது. இருந்தாலும், இருவரும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், புகார் அளித்து பரபரப்பை கிளப்பிய லிண்டா டிரிப் என்பவர் புற்றுநோய் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தை அடுத்து இந்த விகாரம் சற்று தணிந்து வருகிறது. 

டொனால்ட் ட்ரம் - ஸ்டார்மி டேனியல்ஸ்

அமெரிக்காவில் கடந்த முறை அதிபராக பதவியில் இருந்தவர் டொனால்ட் ட்ரம்ப். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன ட்ரம்ப் பதவி காலம் முடிந்தும் சர்சையில் தொடர்ந்து கொண்டே வருபவர். அவ்வப்போது அவர் போடும் ட்வீட்டுகளும் பேட்டுகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்துவது உண்டு. அதில் ட்ரம்புக்கு நிகர் ட்ரம்ப்பு தான். மற்ற அதிபர்கள் ஹாலிவுட் நடைகையுடனும் அலுவலக உதவியாளருடனும் உறவில் இருந்து சர்ச்சைக்கு உள்ளானார்கள். ஆனால் ட்ரம்ப் சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பதோ ஆபாச பட நடிகையும் இயக்குனருமாக ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருடன் உறவில் இருந்தது தான். அனைத்திலும் வேறுப்பட்டு காணப்படும் ட்ரம்ப்  தற்போது சர்ச்சையிலும் வேறுபட்டு காணப்படுகிறார். 

இந்த குற்றச்சாட்டு அடங்குவதற்குள் கட்சியில் வழங்கப்பட்ட பிரச்சார நிதியையும் அந்த ஆபாச பட நடிக்கைக்குமே வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கு முன் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் நெருங்கி பழகியுள்ளதாகவும், இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க  ஸ்டார்மி டேனியல்ஸுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்து வருவதும் தொடர்ந்து அவர் மீது அடுக்கடுக்கான புகார் குவிந்து வருவதும் வாடியாகியுள்ளது. 

டொனால்ட் ட்ரம்பின் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல் பற்றிய பல்வேறு விஷயங்களும் வெளியாகி வருகின்றன. டொனால்ட் ட்ரம்ப்புக்கும், அவருக்கும் இடையேயான பழக்கம், உறவு பற்றிய விபரங்களும் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்காவின் லூசியானாவின் பேன் ரூஜ் நகரை சேர்ந்தவர் ஸ்டோர்மி டேனியல்ஸ். இவருக்கு வயது 44. இவரது உண்மையான பெயர் ஸ்டெபானி கிரேகாரி கிளிபோர்ட் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்புக்கு சொந்தமான ஓட்டலில் தான் ட்ரம்ப் -  ஸ்டார்மி டேனியல்ஸ் சந்திப்பு ரகசியமாக நடைபெறும் என்றும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. 

கைதான ட்ரம்ப்

இந்நிலையில், உண்மைகளை மறைத்து அதிபர் பதவியில் இருந்ததாக கூறி ட்ரம்ப் மீது வழக்கு தொரப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளர். அமெரிக்க சட்டப்படி, அதிபராக இருப்பவர் ஒரு மனைவியுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இதனை மீறியதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.