தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்.. 

modi

தடபுடல் வரவேற்பு

தமிழகத்திற்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு இன்று மதியம் சரியாக 2.45 மணியளவில் விமானத்தில் தரையிரங்கினார். பிரதமரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றனர். பிரதமரின் வருகையையொட்டி, பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், பேனர்களும் வைக்கப்பட்டு பிரதமரை பாஜக தொண்டர்கள் வரவேற்றனர்.  

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்

விமான நிலையத்திலிருந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் முதலமைச்சர், ஆளுநர் மற்றும் இணையமைச்சர் உடன் இருந்தனர். அதன் பின்னர், ஐ.என்.எஸ்.அடையாறில் இருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றார். சென்ட்ரலில், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். 

அதன்பிறகு, மாலை 4.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து கார் மூலம் மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இதனையடுத்து, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவை மற்றும் ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை தற்போது பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஆஸ்கர் நாயகர்களை பாராட்டுகிறார்

நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, இரவு 8.45 மணியளவில் அங்கிருந்து தனி விமானம் மூலம் மைசூரு புறப்பட்டு செல்கிறார். நாளை புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-ம் ஆண்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின்பு ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தின் நாயகர்களான பொம்மன் - பெள்ளியை சந்தித்து பாராட்டுகிறார்.