சுதந்திர தின விழாவையொட்டி தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு நல்ல வரவேற்பு 

independence day

77வது சுதந்திர தினம்

இந்திய நாட்டின் 76 வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படும் நிலையில் தேசிய கொடி மற்றும் சுதந்திர தின விழா அலங்கார பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருப்பூரில் உள்ள அச்சக நிறுவனத்தில்  வித விதமான பேப்பர் கொடிகள், அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. இதில் பென்சில் வைக்கப்பட்ட கொடி, கார்ட்டூன் கொடி ஸ்டிக்கர்கள், மூவர்ண பறவைகள், பட்டாம்பூச்சிகள், தோரணங்கள் தயாரிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. 

பொதுமக்கள் வரவேற்பு

இதில் குழந்தைகளை கவரக் கூடிய மகாத்மா காந்தி, அப்துல் கலாம், நேதாஜி, பகத்சிங், காமராஜர், விவேகானந்தர் ஆகியோரது படங்கள் கொண்ட முகமூடிகள் தயார் செய்து வருகின்றனர். தோரணங்களில் தேசிய கொடி தோரணங்கள் வித்தியாசமான வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொடிகள், தோரணங்கள் அலங்கார பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும்,  திருப்பூரில் வேலை வாய்ப்பு குறைந்து விட்ட நிலையில் பேப்பர் கொடி, அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தொழில் கை கொடுத்ததாகவும் அச்சக உரிமையாளர் குமார் தெரிவித்தார்.