பொதுமக்கள் தவறாமல் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை புகைப்பட  கண்காட்சியை பார்க்கவேண்டும் - நடிகர் விமல் .

actor vimal

ஏராளமானோர் வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சென்யிட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சியை தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பிரபல திரைப்பட நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன் ஆகியோர் திருச்சிக்கு வருகை தந்து நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில், நடிகர் விமல் திருச்சியில் நடந்த புகைப்பட கண்காட்சியை கண்டு களித்தார். 

ஓடி உழைத்த முதலமைச்சர் - நடிகர் விமல்

இதனையடுத்து பேசிய அவர், தமிழ்நாடு  முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்படமும் முதலமைச்சரின் உழைப்பை மக்கள் மத்தியில் எடுத்துக்காட்டு விதமாக அமைந்துள்ளது. உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஓடி உழைத்த நமது தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் விதமாக இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது .இந்த கண்காட்சியை நான் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பொதுமக்களும் தவறாமல் இந்த கண்காட்சியை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.