ஓரினச்சேர்க்கை திருமணங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் - உச்சநீதிமன்றம்

supreme court on lgbt

ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கென்று நேரம் இருக்கிறது 

இந்தியாவின் நீண்ட காலமாக விவாதப் பொருளாக இருக்கும் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் சில சமயங்களில் சமூக சிக்கல்களால் ஏற்படும் மாற்றங்கள் சிறப்பான முடிவைத் தரும் என்றும் ஆனால் அதற்கென்று நேரம் இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. தற்போதைக்கு நாம் வரையறுக்கப்பட்ட பிரச்சினையில் மட்டுமே இருக்க முடியும், தனிப்பட்ட சட்டப் பிரச்சினைகளுக்குள் நுழையக்கூடாது என்றும் கூறியுள்ளது. 

ஓரின சேர்கையாளர்களுக்கும் சமூகத்தில் உரிமை உண்டு 

அப்போது, மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இந்த நீதிமன்றத்தை அணுக எனக்கு உரிமை உண்டு”. அரசியலமைப்பின் கீழ் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் சமூகத்தின் பாலினக் குழுக்களின் அதே உரிமைகள் உள்ளன” என்ற கருத்தை முன் வைத்தார். 

ஓரினச்சேர்க்கை திருமணங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும்

இதனை கேட்ட நீதிமன்றம் “நமது சமூகம் தன்பாலின ஜோடிகளை அதிக அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் இது மிகவும் சாதகமானது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வளர்ந்து வரும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும் அதற்கு ஏற்ற எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கும் நீதிமன்றம் வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, “”என்னிடம் ஒரு ஆணின் பிறப்புறுப்பு இருக்கலாம், ஆனால் ஒருவேளை பரிந்துரைக்கப்படுவது போல் ஒரு பெண்ணாக இருந்தால், சிஆர்பிசியின் கீழ் நான் எப்படி நடத்தப்படுவேன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. எனவே சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.