நல்ல டாக்டர் வந்தால் இபிஎஸ் நோயை குணப்படுத்தலாம்  - நகைச்சுவையாக பேசிய திருமதி சசிகலா

sasikala

நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமதி சசிகலா, முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ், ஒபிஎஸ்,  பாஜக அண்ணாமலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். 

ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சசிகலா

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் நடைபெற்ற விழாவில் திருமதி சசிகலா கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் அருட்சகோதரிகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கேக்  வெட்டியதுடன் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகளை வழங்கினார். இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த திருமதி சசிகலா, இபிஎஸ் -ஓபிஎஸ் தனித்தனியாக செயல்படுவது கட்சிக்கு நல்லதல்ல என்றும், தொண்டர்களுடன் இணைந்து முடிவெடுப்பது தான் கட்சி நல்லது என்றும் கூறினார். மேலும் எம்ஜிஆர். ஜெயலலிதா வழியில் கட்சியில் எல்லோரையும் ஒருதாய் மக்களாகவே தான் நடத்துவதாகவும் தான் இருக்கும் வரை தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள் என்றும், அனைவரையும் ஒருங்கிணைக்கு பணியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் பேசியுள்ளார்.

யூடுயூப் ல கட்சியை வளர்க்க முடியாது - அண்ணாமலைக்கு நச்சு பதில்

அப்போது பாஜக குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, யூடிப் சேனல்களையும் டிவி சேனல்களை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை நடத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு இப்போது செய்வது வேறு என்றும் அது தற்போது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு பிறகு கட்சியை யார் வழி நடத்துவார் என்ற ஆலோசனையிலும் ஜெயலலிதா ஈடுபட்டு வந்ததாகவும், அதற்கான வேலைகளும் நடைபெற்று வந்ததாகவும், திடீரென்று ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அந்த பணிகள் முழுமையடைமால் போனதாக தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோருடைய எண்ணமும் ஒரே மாதிரியாக இருக்காது. அது எப்போது வேண்டுமானலும் மாறலாம் என்றும், துரோகம் இழைத்தவர்களின் செயல்பாடுகள் மாறுவது இயல்பு தான் என்றாலும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார், 

முதுகில் குத்திய ஆறுமுகசாமி ஆணையம்

நீதிமன்ற தீர்ப்பின்படி தான் சிறை செல்ல நேர்ந்தபோது, அதிமுக ஆட்சியை சிறப்பாக அமைத்து தான் சிறை சென்றதாகவும், துரோகம் இழைத்தவர்களும், ஆறுமுகசாமி ஆணயமும் என்னை பற்றி வேண்டுமென்ற பொய் தகவல்களை சொல்லி வருவதாகவும், தான்ன் இல்லாதபோது முதுகி குத்துவது என்பது மனித இயல்பே கிடையாது என்றும் காட்டமாக கூறியுள்ளார். ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில்  பெண் சிங்கமாக தானும் ஜெயலலிதாவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு சாதித்ததாகவும், அதனால் தான் மக்களு நல்ல காரியங்களை செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜெயலிதாவின் மரணத்தை பற்றி மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை எனவும் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டாம் என்று ஜெயலலிதாக தெளிவாக கூறியதால் தான் வெளிநாட்டு டாக்டர்களை இங்கு வரவழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பார்த்ததாகவும், குறிப்பிட்ட அவர், தனக்கு பணிவிடைகள் செய்த மருத்துவ பணியாளர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது குறித்தும் தன்னிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். 

நான் வந்தால் எல்லாம் சரியாகிடும்

அதிமுகவில் மகளிர்களின் ஈடுபாடு குறைந்துள்ளதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தான் வந்தால் மகளிர் ஈடுபாடு எப்படி குறையாமல் இருக்கும் என பதிலளித்தார். தனது தலைமையில், அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுகவை வெற்றி பெற வைப்ப உழைப்பதாக கூறினார். 

நல்ல டாக்டர் வந்த அதிமுக நோய் குணமாயிடும் 

தற்போது இபிஎஸ்க்கு நோய் ஏற்பட்டுள்ளதாகவும், நல்ல டாக்டர் இருந்தால் இபிஎஸ் -ஐ குணப்படுத்தலாம் என்று கிண்டலடித்த சசிகலா, எனக்கு எங்கும் ஓடி ஒளியுன் எண்ணம் கிடையாது என்றும், மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தைரியமாக செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.