செந்தில் பாலாஜிக்கு சிறை கைதி எண் வழங்கல்.!

number

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மூன்று  மனுக்கள் மீதான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடியநிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை நிராகரிக்க வேண்டும் என்ற ஒரு மனுவும், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரிய மனுவும், அமலாக்கத்துறையினர் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. 

மனுக்கள் தள்ளுபடி

அந்த மூன்று மனுக்கள் மீதான விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தற்போது சென்னை மாவட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி வழங்கியிருக்கிறார். தீர்ப்பில், ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை ரிமாண்டில் வைத்திருப்பதால் அந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி அல்லி. 

செந்தில் பாலாஜிக்கு சிறை கைதி எண் வழங்கல்

அடுத்ததாக அமலாக்கத்துறையினர் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி. இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 001440 என்ற பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. 

விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆயுதப்படை காவலர்கள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்ட நிலையில், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.