2026-ல் தனித்து போட்டி.. சரத்குமார் அறிவிப்பு.!

SMK

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தாம் தனித்து போட்டியிடப்போவதாக சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார். 

தனித்து போட்டி

சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு துவக்க விழா திருப்பூரில் உள்ள பாண்டியன் நகரில் இன்று செப்-11-ம் தேதி நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தொண்டர்கள் மத்தியில் பேசத் தொடங்கினார். அதில் பேசிய அவர்; "சமத்துவ மக்கள் கட்சி 2026-ல் தேர்தலில் தனித்து  போட்டியிடுவது நிச்சயம் என 3 ஆண்டுகள் கழித்து வரக்கூடி தேர்தலுக்கு இப்போதே கட்சியின் நிலைப்பாட்டை தொண்டர்கள் மத்தியில் அறிவிப்பு செய்தார்.

அரசியல் ஞானி கருணாநிதி

தொடர்ந்து பேசிய அவர், நான் பார்த்த அரசியல் ஞானி கலைஞர் கருணாநிதி. சிறந்த தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று சொல்லும் ஒரே கட்சி சமத்தவ மக்கள் கட்சி. இலவசம் என்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் பிரச்சனைகளை சமத்துவ மக்கள் கட்சியினர் மற்றும் மக்கள் அந்தந்த ஆட்சியர் அலுவலகங்களில்  பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.  

மக்கள் மாற வேண்டும்

நான் சம்பாத்தித்து தான் கட்சியை நடத்த வேண்டும். வரும் காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் மாற வேண்டும். அரசியல் கட்சியினரிடம் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும் அப்போது தான் ஆட்சி மாறும் மக்களின் வாழ்வாதரம் பொருளாதாரம் மாறும்" என்று பேசினார்.