’வாரிசு’ படத்தில் இணைந்த STR… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

’வாரிசு’ படத்தில் இணைந்த STR… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Simbu Vijay

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் படம் தான் ‘வாரிசு’.விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'வரசுடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படம் 2023 பொங்கலன்று வெளியாக உள்ளது. 

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நடிகர் விஜய், மானசி குரலில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே..' இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. 

ரஞ்சிதமே பாடல் வரிகள் - Ranjithame Song Lyrics in Tamil

இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு பாடலை நடிகர் STR பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'பத்து தல' படத்தில் நடித்து வரும் STR, அண்மையில் 'தி வாரியர்' படத்தில் இடம்பெற்ற 'புல்லட்..' பாடலை பாடினார். மேலும் ஹாலிவுட் படமான 'டபுள் XL' படத்தில் 'தாலி தாலி..' என்ற பாடலை பாடியுள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் STR குரலில் வெளியான பாடல்கள் அதிகமானவை ஹிட் ஆகியிருக்கும் நிலையில், வாரிசு படத்தில் இவர் பாடும் பாடலும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.